வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகளுக்குப் பிறகு அதுபற்றிய விவாதம் தேவையா? என காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசியப் பாடலான வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதைக் கொண்டாடும் வகையில் மக்களவையில் இன்று வந்தே மாதரம் குறித்த விவாதத்தைத் தொடக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் அவையில் வந்தே மாதரம் பாடல் குறித்து உரையாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா செய்தியாளர்களிடம் இதுபற்றி பேசுகையில்,
"பிரதமர் மோடி, ஜவாஹர்லால் நேருவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். பல ஆண்டுகள் ஆகிவிட்டது, எனினும் மோடி, நேருவை விமர்சித்துக் கொண்டே இருக்கிறார். அவர்களுக்கு வந்தே மாதரத்தைப் பற்றி கவலையில்லை. மேற்கு வங்கத் தேர்தலைக் கணக்கில் கொண்டு வந்தே மாதரம் குறித்துப் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதன் மூலமாக வந்தே மாதரம் பாடலை இயற்றிய ரவீந்திரநாத் தாகூரை அவர்கள் அவமரியாதை செய்கின்றனர்.
150 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தே மாதரம் பற்றிய விவாதம் தேவையா? நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. அப்போது அவர்களோ அல்லது அவர்களின் ஜன சங்கமோ இந்தப் பிரச்னையை எழுப்பவில்லை. ரவீந்திரநாத் தாகூரை அவமதிக்க முயற்சிக்கிறது பாஜக. ஜவாஹர்லால் நேருவை தொடர்ந்து அவமதிக்க்கும் அவர்கள் இப்போது ரவீந்திரநாத் தாகூரையும் அவமதிக்கத் தொடங்கியுள்ளனர்" என்று பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.