கோப்புப்படம் ENS
இந்தியா

பிரதமர் மோடி பாதி நாள்களை வெளிநாட்டில்தான் செலவிடுகிறார்: பிரியங்கா காந்தி பதில்

ராகுலின் வெளிநாட்டுப் பயணத்தை பாஜகவினர் விமர்சித்ததற்கு பிரியங்கா காந்தி பதில்...

இணையதளச் செய்திப் பிரிவு

பிரதமர் மோடி தனது வேலை நாள்களில் பாதியை வெளிநாட்டில்தான் செலவிடுகிறார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்கு பாஜகவினர் அவரை விமர்சித்து வரும் நிலையில் பிரியங்கா காந்தி அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இந்திய காங்கிரஸின் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவும் வெளிநாட்டில் உள்ள இந்தியர்களைச் சந்திக்கும் பொருட்டும் வருகிற டிச. 15 ஆம் தேதி ஜெர்மனிக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

குளிர்காலக் கூட்டத்தொடருக்கு மத்தியில் ராகுல் காந்தி ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்வதாக அவரை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் வெளிநாடுகளுக்குச் செல்கிறார் என்றும் பிரதமர் மோடி பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது பாஜகவினர் ஏன் கேள்வி எழுப்புவதில்லை என்றும் காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இதற்கு பதில் அளிக்கையில்,

"பிரதமர் மோடி தனது வேலை நாள்களில் பாதியை வெளிநாட்டில்தான் செலவிடுகிறார்.

மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை எல்லாம் விட்டுவிடுகிறீர்கள்... எதிர்க்கட்சித் தலைவரின் வெளிநாட்டுப் பயணங்களை மட்டும் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

PM Modi spends half his working time outside country: Priyanka Gandhi defends Rahul Gandhi's upcoming Germany visit

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகிய சிரிப்பொன்றின்போது... மாளவிகா மனோஜ்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் சரிந்து ரூ.89.96 ஆக நிறைவு!

பூ பூக்கும் ஓசை... கஜோல்!

மகாராஷ்டிரத்தில் 11 மாவோயிஸ்டுகள் சரண்!

குறைந்த விலை, நிறைந்த தரம்! லாவா பிளே மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

SCROLL FOR NEXT