பிகாரில் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அனாதை பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம் பக்சரை சேர்ந்தவர் கோலு யாதவ். இவர் தனது ரயில் பயணத்தின்போது பிச்சை எடுத்துக்கொண்டிருந்த இளம்பெண் ஒருவரைச் சந்தித்துள்ளார். அந்த பெண்ணிடம் பயணிகள் சிலர் தவறாகப் பேசியும், ஒருசிலர் தவறாகவும் நடக்க முயன்றுள்ளனர். இதனால் அந்தப் பெண் பெரும் சங்கடமாக உணர்ந்துள்ளார்.
அனாதைப் பெண்ணை பாதுகாக்க கோலு, தன்னுடன் அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்தப் பெண்ணின் நிலையை குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அந்தப் பெண்ணின் பின்னணி மற்றும் அவர் எதிர்கொண்ட சிரமங்களைப் பற்றி அறிந்த கோலு குடும்பத்தினர் அவளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர்.
சில நாள்கள் அந்தப் பெண் கோலுவின் வீட்டில் தங்கிவந்துள்ளார். நாள்கள் சென்ற நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் அந்தப் பெண்ணை கோலு திருமணம் செய்துகொண்டார்.
இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தம்பதியின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.