காவல்துறை - கோப்புப்படம் Center-Center-Vijayawada
இந்தியா

கோவாவில் இளம்பெண் கொலை! காதலன் எங்கே? பெங்களூரிலிருந்து மணம்புரிய வந்தவர்கள்!

கோவாவில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெங்களூர் தப்பிச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

DIN

தெற்கு கோவாவின் பிரதாப் நகரில் உள்ள அடர்ந்த வனப்பகுதியிலிருந்து ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது 22 வயது காதலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணம் செய்துகொள்ளும் ஆசையோடு, பெங்களூரிலிருந்து கோவா சென்ற காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை கொலையில் முடிந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டவர் சஞ்சய் கெவின் (22) என்பதும், இவர் கர்நாடக மாநிலம் வடக்கு பெங்களூரைச் சேர்ந்தவர் என்பதும், கொலையான பெண் ரோஷினி மோசஸ் (22) என்பதும், இவரும் அதேப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. ரோஷினியைக் கொலை செய்துவிட்டு, சஞ்சய் பெங்களூருக்குத் தப்பிக் சென்றிருக்கிறார்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருப்பதாவது, திருமணம் செய்துகொள்வதற்காக இருவரும் பெங்களூரிலிலுந்து கோவாவுக்கு அண்மையில் வந்துள்ளனர். ஆனால், ஏதோ ஒரு காரணத்துக்காக இருவருக்கும் இடையே சண்டை வலுத்து, அதில் சஞ்சய், ரோஷினியைக் கொன்று வனப்பகுதியில் உடலை வீசியிருக்கிறார்.

இதையும் படிக்க.. போபாலின் 90 டிகிரி மேம்பாலத்துக்கு டஃப் கொடுக்கும் ஆந்திர மேம்பாலம் இதுதானா?

வனப்பகுதியில், பெண்ணின் உடல் கழுத்தறுபட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், விசாரணை நடத்தியதில், சஞ்சய்தான் கொலையாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டு, பெங்களூர் சென்ற தனிப்படையினர் அவரைக் கைது செய்திருக்கிறார்கள்.

கொலைக்கான காரணம் பிறகு தெரியவரும் என்று கூறப்படுகிறது.

திருமணம் செய்துகொள்ளும் கனவோடு வந்த காதல் ஜோடிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு கொலையில் முடிந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சித்தோட்டில் 227 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்

அம்மாபேட்டை அருகே ஆடு திருட முயன்ற 3 போ் கைது

மீன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

ஈரோடு ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT