மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் கூறியதில்லை என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஒருபோதும் ஏற்க முடியாது. புதிய கல்விக் கொள்கையில் எங்களுக்கு சில முரண்பாடுகள் இருந்தன. அதனால் நாங்கள் புதிய கல்விக் கொள்கைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் கூறியதில்லை.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே தெளிவாக சொல்லிவிட்டார். நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மாற்றவில்லை. ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். திமுக அரசு, முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் நாங்கள் நிற்கிறோம்.
இதையும் படிக்க | திமுக எம்.பி.க்கள் பற்றி தவறான கருத்து: திரும்பப் பெற்றார் பிரதான்!
திமுக எம்.பி.க்களையும் தமிழ்நாட்டு மக்களையும் பொய்யர்கள், நாகரிகமற்றவர்கள் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் தவறாகப் பேசி எங்கள் உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கிறார். இது நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது. மத்திய அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும்.
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை ஒப்பிட்டு தற்போது கல்வி நிதி தர மறுக்கிறது. எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் உள்ள நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி. அந்த நிதியையே தர மறுக்கிறார்கள்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என்று அமைச்சர் கூறுவது வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது" என்றார்.
திமுக எம்.பி.க்கள் அநாகரிகமானவர்கள் என அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் தனது வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதாக அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.