மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டி-சர்ட் அணிந்து போராட்டம் நடத்தியது பற்றி...
நாடாளுமன்றத்திற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாசகங்கள் பொறித்த டி-சர்ட் அணிந்து வந்ததால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் இன்று காலை அவை கூடியதும், மக்களவைக்கு வந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் எல்லை நிர்ணயம் தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்டிருந்த டி-சர்ட்களை அணிந்து வந்தனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணிக்கு அவைத்தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
Advertisement
Advertisement
திமுக உறுப்பினர்கள் 'தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்' என்ற வாசகங்கள் எழுதப்பட்ட வெள்ளை டி-ஷர்ட்களை அணிந்திருந்தனர்.
திமுக உறுப்பினர்கள் வாசகங்கள் எழுதப்பட்ட டி-ஷர்டுகளை அணிந்திருந்ததை மக்களவை தலைவர் ஓம் பிர்லா கண்டித்தார். இதுபோன்ற நடவடிக்கைகள் அவையின் நடைமுறை விதிகளுக்கு எதிரானது. எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், கண்ணியமற்ற உடை அவைக்குள் ஏற்றுக்கொள்ளப்படாது.
வெளியே சென்று, உங்கள் உடைகளை மாற்றிக்கொண்டு, சரியான உடையுடன் திரும்பி வாருங்கள் என்று நாடாளுமன்ற விதிகளை மேற்கோள் காட்டி உறுப்பினர்களிடம் கூறி நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் எம்பிக்கள் அதே உடையில் மீண்டும் திரும்பியதைக் கண்டித்து பிற்பகல் 2 மணி வரை மக்களவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.