முகப்பு
இந்தியா

ஒடிசா: இன்று முதல் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்!

வெயில் கொளுத்திவரும் நிலையில் ஒடிசாவில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் பற்றி..

Updated On : 21 மார்ச் 2025, 12:27 pm IST
பகிர்:

ஒடிசா மாநிலத்தில் அதிகப்படியான வெயில் கொளுத்திவரும் நிலையில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதன்படி ஒடிசா மாநிலத்தில் கடந்த சில நாள்களாக வெய்யில் அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக 104.5 டிகிரியும், பவுத் மாவட்டத்தில் 104 டிகிரி வெய்யிலும் சுட்டெரித்தது. இந்த நிலையில் வெயில் தாக்கத்திலிருந்து பள்ளி மாணவர்களைப் பாதுகாக்கும் வகையில் பள்ளி நேரங்களை மாற்றியமைத்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய ஒடிசா அமைச்சர் நித்யானந்த கோண்ட் கூறுகையில்,

Advertisement

Advertisement

அதிகப்படியான வெய்யிலின் தாக்கத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் காலை 6.30 முதல் 10.30 மணி செயல்படும் என்று அந்த மாநில முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவிப்பு இன்று முதல் (மார்ச் 21) முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதிகரித்துவரும் வெப்பநிலையால் மாணவர்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காமல் பார்த்துக்கொள்ளப் பள்ளியில் மாணவர்களுக்கு தண்ணீர் மற்றும் ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்படுகிறது. மாணவர்களை வெய்யிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments