பட்டியலினத்தவர்கள் மீது விரோத மனநிலையை காங்கிரஸ் கொண்டிருப்பதாக பாஜக தலைவர் சி. ஆர். கேசவன் கூறினார்.
நாட்டில் இன்றளவிலும் சமத்துவமின்மை இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் பதிவுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் சி. ஆர். கேசவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது ``தங்கள் கடின உழைப்பு, முழு அர்ப்பணிப்பு மூலம் பொது வாழ்க்கையில் முன்னேறிய எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகங்களைச் சேர்ந்த திறமையான தலைவர்களை நிலப்பிரபுத்துவ மனநிலையைக் கொண்ட வம்சாவளி காங்கிரஸ் எப்போதும் வரலாற்றுரீதியாக துஷ்பிரயோகம் செய்து அவமதித்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி எப்போதும் தலித் விரோத மனநிலையைத்தான் கொண்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) முன்னாள் தலைவரும் பொருளாதார நிபுணருமான சுக்தியோ தோரட்டுடன், சமத்துவமின்மை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாடிய விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விடியோவில் அவர் தெரிவித்ததாவது, ``மகத் சத்தியாகிரகம், நிர்வாகம், கல்வி, அதிகாரத்துவம், தலித்துகளின் உரிமைப் போராட்டம் குறித்து விரிவாக உரையாடினோம். 1927 ஆம் ஆண்டில் மார்ச் 20-ல் மகத் சத்தியாகிரகத்தை அம்பேத்கர் நடத்தினார். இது தண்ணீர் உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல, சமத்துவம் மற்றும் மரியாதைக்கானதாகவும் இருந்தது. 98 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய உரிமைக்கான போராட்டம் இன்றும் நடந்து வருகிறது.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது சமத்துவமின்மை, பாகுபாடு பற்றிய உண்மையை வெளிப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாகும். இருப்பினும், அம்பேத்கரின் கனவு இன்னும் முழுமையடையவில்லை.
அவரது போராட்டம் கடந்த காலத்திற்கானது மட்டுமல்ல, இன்றைக்கும் தேவையானதுகூட. நாங்கள் அதை முழு பலத்துடன் போராடுவோம்’’ என்று கூறினார்.
இதையும் படிக்க: மோடி அரசு பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது: அமித் ஷா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.