ANI
இந்தியா

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை - நேரலை

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள்.

இணையதளச் செய்திப் பிரிவு

தேஜ் பிரதாப் பின்னடைவு

பிகார் தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவின் சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் பின்னடைவை சந்தித்துள்ளார்.

மஹுவா சட்டப்பேரவைத் தொகுதியில் ஜனசக்தி ஜனதா தளம் கட்சியின் சார்பாக போட்டியிட்ட தேஜ் பிரதாப் யாதவ், காலை 10 மணி நிலவரப்படி நான்காவது இடத்தில் (1078) உள்ளார்.

காங்கிரஸ் 12 இடங்களில் முன்னிலை

பிகார் தேர்தலில் 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், காலை 9.30 மணி நிலவரப்படி, வெறும் 12 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

முழு விவரம் : பிகார் தேர்தல்: தே.ஜ. கூட்டணி 154 தொகுதிகளில் முன்னில்லை!

ஜன் சுராஜ்

பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி காலை 9 மணி நிலவரப்படி, வெறும் 5 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகின்றது.

தேஜ கூட்டணி முன்னிலை

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காலை 8.30 நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் உள்ளது.

முழு விவரம் : பிகார் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை!

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. காலை 8.30 மணிக்கு மேல் மின்னணு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்.

முழு விவரம் : பிகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

வாக்கு எண்ணிக்கை

மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்புடன் 46 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. 8.30 மணிக்கு மேல் மின்னணு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்.

243 தோ்தல் அதிகாரிகள், 243 பாா்வையாளா்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனா். தலா ஒரு மேற்பாா்வையாளா், உதவியாளா், நுண் பாா்வையாளருடன் 4,372 வாக்கு எண்ணப்படும் மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்பாளா்கள் சாா்பில் நியமிக்கப்பட்ட 18,000-க்கும் அதிகமான முகவா்களும் வாக்கு எண்ணும் நடைமுறையை மேற்பாா்வையிட உள்ளனா் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நிதீஷ் ஆட்சி தொடருமா?

பிகாரில் சில குறுகிய இடைவெளிகளைத் தவிர 20 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நீடிக்கிறது. முதல்வா் நிதீஷ் குமாரின் நல்லாட்சி பிம்பம், பெண்களுக்கு ரூ.10,000 உதவித் தொகை, வீடுகளுக்கு 125 யூனிட் இலவச மின்சாரம் போன்ற திட்டங்கள் தங்களது வெற்றியை உறுதி செய்யும் என தேசிய ஜனநாயக கூட்டணி நம்புகிறது.

ஆனால், இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதீஷ் குமார் கருதப்பட்டாலும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

யாருக்கு ஆட்சி?

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டன. மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 29, மத்திய அமைச்சா் ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா 6, மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோா்ச்சா 6 இடங்களில் போட்டியிட்டன.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், விகாஸ்ஷீல் இன்சான் கட்சி, இடதுசாரிகளை உள்ளடக்கிய எதிரணியில் சுமுக உடன்பாடு ஏற்படாததால், தொகுதிப் பங்கீடு அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை. பெரிய கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61 இடங்களில் போட்டியிட்டன.

ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக பிரதமா் மோடி, முதல்வா் நிதீஷ் குமாா், மத்திய அமைச்சா்கள், பாஜக ஆளும் மாநில முதல்வா்கள் உள்ளிட்டோரும், எதிரணியில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனா்.

பிகார் தேர்தல்

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப்பேரவைக்கு கடந்த நவ. 6, 11-இல் இரு கட்டங்களாக (121, 122) தோ்தல் நடைபெற்றது.

7.45 கோடி வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் வரலாறு காணாத அளவில் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆண்களைவிட (62.8%), பெண்கள் (71.6%) அதிகம் வாக்களித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீரிழிவு நோய் யாரையெல்லாம் தாக்கும்? ஜாதகம் மூலம் அறிய முடியுமா?

கொல்கத்தா டெஸ்ட்: தெ.ஆ. பேட்டிங், துருவ் ஜுரெல், ரிஷப் பந்த் சேர்ப்பு!

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 2 பேர் பலி, 21 பேர் மாயம்

பிகார் தேர்தல்: தேஜஸ்வி யாதவ் சகோதரர் பின்னடைவு!

நிதீஷ் குமார் வீட்டு வாசலில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் பரபரப்பு

SCROLL FOR NEXT