File photo | PTI
இந்தியா

சத்தீஸ்கர்: என்கவுன்டரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரின் சுக்மாவில் நிகழ்ந்த என்கவுன்டரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

சத்தீஸ்கரின் சுக்மாவில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த என்கவுன்டரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம், பெஜ்ஜி மற்றும் சிந்தகுபா காவல் நிலையப் பகுதிகளுக்கு இடையே உள்ள காட்டு மலைகளில் நக்சல்கள் நடமாட்டம் குறித்த தகவல் கிடைத்ததையடுத்து மாவட்ட ரிசர்வ் காவல் படை குழுவினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது நடந்த துப்பாக்கிச்சண்டையில் 3 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் கூறுகையில், இதுவரை, மூன்று நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

சம்பா பயிர்க் காப்பீடு நவ.30 வரை கால நீட்டிப்பு!

சத்தீஸ்கரில் இந்த ஆண்டு இதுவரை நடந்த என்கவுன்டரில் 262 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில், சுக்மா உள்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பிரிவில் 233 பேரும், ராய்ப்பூர் பிரிவின் கரியாபந்த் மாவட்டத்தில் 27 பேரும் கொல்லப்பட்டனர் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொலம்பியாவில் விமான விபத்து! எம்.பி. உள்பட 15 பேர் பலி!

பாராமதியில் அஜீத் பவாருக்கு இன்று இறுதிச் சடங்கு! ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக ரத்ததான முகாம்

ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறையை திறக்கக் கோரிக்கை

சுவா் இடிந்து விழுந்து வடமாநில இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT