தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையைச் சீர்குலைப்பதாகக் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மீது நீதிபதிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள்,உள்பட மொத்தம் 272 பேர் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
மகாராஷ்டிரம், பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் என அடுத்தடுத்து தோல்விகளைக் காங்கிரஸ் சந்தித்து வரும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். வாக்குத்திருட்டு, போலி வாக்காளர்கள் உள்பட தொடர்ச்சியான புகார்களைச் சொல்லி வருகிறார். மேலும் பாஜக வெற்றிக்குத் தேர்தல் ஆணையம் உதவுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தேர்தல் ஆணையத்தை பலமுறை தாக்கி வருகிறார். தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்கான வெளிப்படையான ஆதாரம் தன்னிடம் 100 சதவீத ஆதாரம் இருப்பதாகவும் கூறியுள்ளார். நம்பமுடியாத அளவிற்கு அநாகரீகமான சொல்லாட்சியைப் பயன்படுத்தி, அவர் கண்டுபிடித்தது ஒரு அணுகுண்டு என்றும், அது வெடித்தால், தேர்தல் ஆணையத்திற்கு மறைக்க இடமில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தும் ராகுல் காந்தியிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. அதேசமயம் அவருக்கு தகுந்த விளக்கத்தையும் அளித்து வருகின்றது.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் தேசிய அரசியலமைப்பு அதிகாரிகள் மீதான தாக்குதலை மீண்டும் மீண்டும் கண்டித்து 16 நீதிபதிகள், 123 ஓய்வு பெற்ற அதிகாரிகள், 14 தூதர்கள், 133 ஓய்வு பெய்ய ஆயுதப்படை அதிகாரிகள் உள்பட மொத்தம் 272-க்கும் மேற்பட்டோர் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
உண்மையான கொள்ளை மாற்றுகள் வழங்குவதற்குப் பதிலான காங்கிரஸ் தலைவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாடியுள்ளார் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நான் எங்கு இருக்கிறேன்? ஆல்யா மானசா வெளியிட்ட விடியோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.