இங்கிலாந்தில் உயர்கல்வி படிக்க சென்ற இந்திய மாணவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹரியாணா மாநிலம், சார்கி தாத்ரியைச் சேர்ந்தவர் விஜய் குமார்(30). உயர்கல்வி படிப்பிற்காக மத்திய கலால் மற்றும் சுங்க வாரிய பணியை துறந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து சென்றிருந்தார்.
தொடர்ந்து, பிரிஸ்டலில் உள்ள மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் அவர் படித்து வந்தார்.
இந்த நிலையில் விஜய் குமார் நவம்பர் 15 ஆம் தேதி வொர்செஸ்டரில் உள்ள பார்போர்ன் சாலையில் பலத்த காயங்களுடன் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
அவரை சனிக்கிழமை இரவு மர்ம நபர்கள் யாரோ கத்தியால் குத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர்.
இதனிடையே விஜய்யின் உடலை விரைவில் இந்தியா கொண்டு வர உதவ வேண்டும் என வெளியுறவு அமைச்சகத்திடம் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.