தில்லியில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகள் போராட்டம் நடத்தியுள்ளனர் படம் - எக்ஸ்/மார்க்சிஸ்ட்
இந்தியா

தில்லியில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகள் போராட்டம்!

தில்லியில் இடதுசாரி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியின், ஜன்தர் மந்தர் பகுதியில், இஸ்ரேலுடனான அனைத்து ஆயுத ஒப்பந்தங்களையும் ரத்து செய்ய வேண்டுமெனவும், பாலஸ்தீனத்தின் விடுதலைக்கு மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியும், நாட்டின் முக்கிய இடதுசாரி கட்சிகள் இன்று (அக். 9) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ (எம்எல்), ஆல் இந்தியா ஃபார்வர்ட் பிளாக் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இதுபற்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆர். அருண் குமார் கூறுகையில், இஸ்ரேல் எனும் நாடு உருவானது முதல் பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடைபெற்று வருவதாகவும், அமெரிக்காவின் ஆதரவின்றி இஸ்ரேலினால் இந்தத் தாக்குதல்களை நடத்தியிருக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இத்துடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி அமர்ஜித் கௌர் கூறியதாவது:

“இடதுசாரிகளும் இந்திய மக்களும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். மேலும், மத்திய அரசு இஸ்ரேலுடன் எந்தவொரு வர்த்தக உறவுகளையும் வைத்துக் கொள்ளக்கூடாது” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: ஐஸ்வர்யா ராயுடன் மோதிய அழகி! இப்போது ஏன் இமாலயத்தில் இருக்கிறார்?

It has been reported that Left parties have taken part in protests in support of Palestine in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெட் தேர்வு தேர்ச்சி விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தவெகவில் இணைகிறார் செங்கோட்டையன்! விஜய்யுடன் நாளை சந்திப்பு!

நாட்டில் அமைதி முக்கியம்; ஆனால், பாதுகாப்பில் சமரசமில்லை - பிரதமர் மோடி

கோவை மாநாட்டில் ரூ.43,844 கோடி முதலீட்டில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

தேர்வு நேரத்தில் எஸ்ஐஆர் பணிகளில் மாணவர்கள்? கேரள அமைச்சர் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT