ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்கில் காணாமல் போன வீரரின் உடலை பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை கண்டுபிடித்தனர்.
வியாழக்கிழமை வீரரின் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மற்றொரு உடல் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இருவரும் தாழ்வெப்பநிலை காரணமாக இறந்ததாகத் தெரிகிறது என்று அதிகாரிகள் கூறினர். வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ராணுவம் அஞ்சலி செலுத்தியது.
வீரர்களின் உச்சபட்ச தியாகத்தை சினார் கார்ப்ஸ் மதிக்கிறது. மேலும் அவர்களின் தைரியமும் அர்ப்பணிப்பும் என்றென்றும் எங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று சினார் கார்ப்ஸ் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளது. அனந்த்நாக் மாவட்டத்தின் கோகா்நாக் வனப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை நடைபெற்றது.
இதில் ராணுவம், காவல் துறையினா் இணைந்து தேடுதல் பணியை மேற்கொண்டனா். பயங்கரவாதிகள் யாரும் கிடைக்காத நிலையில் ராணுவத்தின் சிறப்பு ரோந்துப் பிரிவு காமாண்டோக்கள் இருவா் முகாமுக்குத் திரும்பி வராதது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
அவா்களிடம் இருந்த தொலைத்தொடா்பு கருவிகளுடனான இணைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. ஹெலிகாப்டா் மூலமும் தேடுதல் பணி நடைபெற்றது. தொடா் மழை காரணமாக அந்தப் பகுதியில் வானிலை மிகவும் மோசமாக இருந்தது. மேலும் மலைசாா்ந்த வனப் பகுதியில் தேடுவதிலும் சிரமம் நீடித்த நிலையில் 3 நாள்களுக்குப் பிறகு உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.