புது தில்லி: மகாகத்பந்தன் கூட்டணி சார்பில், கட்சித் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்டிருந்த போஸ்டரில், தேஜஸ்வி புகைப்படம் மட்டும் இடம்பெற்றிருந்தது குறித்து பாஜக கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளது.
கூட்டாக செய்தியாளர் சந்திப்பு? ஆனால், ஒரே ஒருவரின் புகைப்படம் என்று பதிவிட்டு, புகைப்படங்களை பாஜக பகிர்ந்துள்ளது.
இந்தியா கூட்டணி சார்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியை அறிவிக்க கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டணிக்குள் நிலவி வந்த சில சிக்கல்கள் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் அசோக் கெலாட், கிருஷ்ணா அல்லவாரு உள்ளிட்டோர் தேஜஸ்வி மற்றும் லாலு பிரசாத் யாதவை சந்தித்துப் பேசி சுமூக முடிவு எட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியை வியாழக்கிழமை நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஒட்டுமொத்த பிகாருக்கும் தேஜஸ்வி தெரியும் என்பதால், இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்க இது வகை செய்யும் என்றும் அரசியல் கட்சியினர் கூறியிருக்கிறார்கள்.
தங்கள் கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை என்றும் சுமூகமான முடிவு எட்டப்பட்டிருப்பதாகவும் தேஜஸ்வி கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க.. தடயமே இல்லாமல் மறைந்து போன தாழ்வுப் பகுதி! இனி மழை இருக்காதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.