சதீஷ் கிருஷ்ணா செயில் Photo | Facebook/Satish Sail
இந்தியா

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது! 18 நாளில் இரண்டாவது எம்எல்ஏ!

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது செய்யப்பட்டிருப்பது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

இரும்புத் தாதுவை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்தது தொடர்பான வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா செயிலை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெல்லாரியில் சட்டவிரோதமாக தோண்டி எடுக்கப்பட்டிருந்த இரும்புத்தாது, பெலெகேரி துறைமுகத்தில் இருந்து ஏற்றுமத் செய்ததது தொடர்பான வழக்கில், சதீஷ் கிருஷ்ணா குற்றவாளி என அறிவித்த மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம், அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இதனைத் தொடர்ந்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சதீஷ் கிருஷ்ணா தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைத்தனர்.

இந்த நிலையில், சட்டவிரோத இரும்புத்தாது ஏற்றுமதி வழக்கில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கத் துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி சதீஷ் கிருஷ்ணாவுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்த அமலாக்கத்துறையினர், ரூ.1.68 கோடி ரொக்கம், 6.75 கிலோ தங்கம் மற்றும் பல ஆவணங்களை பறிமுதல் செய்தது, அதே நேரத்தில் ரூ.14.13 கோடி மதிப்புள்ள வங்கிக் கணக்குகளையும் முடக்கியது.

இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராக சதீஷ் கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறையினர் அனுப்பிய சம்மனை ஏற்று, செவ்வாய்க்கிழமை பெங்களூரு அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜரானார்.

அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர் கைது செய்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஒரு நாள் காவலில் எடுத்துள்ளனர்.

அமலாக்கத்துறையின் கைதை விமர்சித்துள்ள கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குறிவைக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி சித்ரதுர்கா எம்எல்ஏ கே.சி. வீரேந்திரா அமலாக்கத் துறையால் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

The ED on Tuesday arrested Congress MLA from Karwar-Ankola Sathish Krishna Sail in connection with a money laundering case linked to the illegal export of iron ore from Belekeri Port.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தின் இடைக்கால அரசை வழிநடத்தும் தலைவராகிறார் முதல் பெண் தலைமை நீதிபதி !

சத்தீஸ்கர்: ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

ரவி மோகன் - யோகிபாபு புதிய படம்: வெளியானது முன்னோட்டக் காட்சி!

கிஷன் தாஸ் - ஹர்ஷத் கானின் ஆரோமலே: அறிமுக விடியோ அப்டேட்!

பிகாரில் மோகாமா-முங்கர் 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

SCROLL FOR NEXT