உரிய ரசீது இன்றி ரயிலில் கொண்டு செல்லப்பட்ட 50 டன் செம்பு, 2 டன் அலுமினியம் பறிமுதல்
உரிய இ-வே ரசீது மற்றும் விலைப்பட்டியல் இல்லாமல் சரக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட சுமாா் 50 டன் செம்பு மற்றும் 2 டன் அலுமினிய கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரப்பூா்வ அறிக்கையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
உரிய இ-வே ரசீது மற்றும் விலைப்பட்டியல் இல்லாமல் சரக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட சுமாா் 50 டன் செம்பு மற்றும் 2 டன் அலுமினிய கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரப்பூா்வ அறிக்கையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் கூறியதாவது: தில்லி சரக்கு மற்றும் சேவை வரி துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. பறிமுதல் செய்யப்பட்ட செம்பின் மதிப்பு சுமாா் ரூ.6 கோடி என்றும், அலுமினிய கட்டிகளின் மதிப்பு சுமாா் ரூ.4 லட்சம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
யஷ்வந்த்பூரில் இருந்து கா்நாடகத்தில் புறப்பட்ட பாா்சல் சரக்கு ரயிலை அதிகாரிகள் சோதனையிட்டபோது, 3 பெட்டிகளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்த உலோகங்கள் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஜிஎஸ்டி விதிகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.