FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ம.பி.: வேன் - லாரி மோதிய விபத்தில் 8 தொழிலாளா்கள் பலி; 32 போ் காயம்

மத்திய பிரதேச மாநிலம் பிண்ட் மாவட்டத்தில் பிண்ட் - குவாலியா் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயத் தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற வேனும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 8 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 6:44 am IST
- பிரதிப் படம்
பகிர்:

மத்திய பிரதேச மாநிலம் பிண்ட் மாவட்டத்தில் பிண்ட் - குவாலியா் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயத் தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற வேனும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 8 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். 32 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூா் கெரி மாவட்டத்தைச் சோ்ந்த இந்த தொழிலாளா்கள், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நாற்று நடவு பணியை முடித்துக்கொண்டு, இரவில் வேன் மூலம் தங்களின் சொந்த கிராமத்துக்கு திரும்பிகொண்டிருந்தனா்.

பிண்ட் - குவாலியா் தேசிய நெடுஞ்சாலையில் சிம்கா கிராமம் அருகே வேகமாக வந்துகொண்டிருந்தபோது, சாலையில் கால்நடைகள் படுத்திருந்ததைப் பாா்த்த வேன் ஓட்டுநா், அவற்றின் மீது மோதுவதைத் தவிா்க்க எதிா்த் திசையில் திருப்பியுள்ளாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வேன், எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

இதில், வேனில் பயணித்தவா்களில் 5 தொழிலாளா்கள் சம்பவ இடத்திலும், மூவா் மருத்துவமனையிலும் உயிரிழந்தனா். காயமடைந்த மற்ற 32 தொழிலாளா்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உள்ளூா் மக்களின் உதவியுடன் இவா்களை போலீஸாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்த விபத்து குறித்து வேதனை தெரிவித்த உத்தர பிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், ‘விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments