முகப்பு
இந்தியா

முற்றிலும் விடுபட்டுப்போன கேரளம்: பட்ஜெட் குறித்து சசி தரூர்

மத்திய பட்ஜெட்டில் கேரளம் முற்றிலும் விடுபட்டுப் போனதாக சசி தரூர் கருத்து.

Updated On : 1 பிப்ரவரி 2026, 3:36 pm IST
சசி தரூர் - ENS
பகிர்:

வரும் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்துள்ளார். அதில், கேரளம் முற்றிலும் விடுபட்டுவிட்டதாக காங்கிரஸ் எம்.சி. சசி தரூர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருக்கும் நிலையில், 5 மாநிலங்களுக்கு தேர்தல் நெருங்கி வந்துகொண்டிருக்கும் நிலையிலும், பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் அதுவும் ஞாயிற்றுக்கிழமையில் வெளியான மத்திய பட்ஜெட் அறிவிப்புகளை ஏராளமான மக்கள் வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மக்களுக்கு நெருங்கிய தொடர்பிருக்கும் ஏதேனும் ஒரு அறிவிப்பாவது வரும் என்று கடைசி வரை காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம்தான். தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பும் மாற்றமில்லை என்ற அறிவிப்புடன் பட்ஜெட் நிறைவுபெற்றுவிட்டது.

Advertisement

Advertisement

இது குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறுகையில், 2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கேரளம் முற்றிலும் விடுபட்டுவிட்டதாகக் கூறியிருக்கிறார்.

கேரளத்தின் நீண்ட நோள் கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனை நிறைவேறாமலேயே உள்ளது. ஆயுர்வேத மையங்களில் ஒன்று, கேரளத்தில் உருவாக்கப்படும் என்பதற்கான உறுதியும் கிடைக்கவில்லை.

கேரளத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், இந்த பட்ஜெட் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்க ஒன்றுமே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments