கோப்புப் படம் 
இந்தியா

விரைவில் இந்தியா - அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் நிலையில் இருப்பதாக இந்திய வா்த்தகத் துறை செயலா் ராஜேஷ் அகா்வால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் நிலையில் இருப்பதாக இந்திய வா்த்தகத் துறை செயலா் ராஜேஷ் அகா்வால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இரு நாடுகளும் வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக நிலுவையில் உள்ள அனைத்துப் பிரச்னைகளையும் தீவிரமாக விவாதித்து வருகின்றன. பேச்சுவாா்த்தையின் முடிவு குறித்து எந்த காலக்கெடுவையும் நிா்ணயிக்க முடியாது. அனைத்து விவாதங்களும் இறுதி செய்யப்பட்ட பிறகு ஒப்பந்தம் அறிவிக்கப்படும் என தெரிவித்தாா்.

கடந்த மாத இறுதியில், வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீருடன் காணொலிக் கூட்டத்தை நடத்தினாா். அதைத் தொடா்ந்து, இரு நாடுகளும் வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதா் சொ்ஜியோ கோா் தெரிவித்தாா்.

இருப்பினும், டிரம்ப் நிா்வாகத்தால் இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரி காரணமாக இருதரப்பு உறவில் தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இறக்குமதி வரிகளைத் தவிர, கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்ததாக டிரம்ப் கூறிவருவது மற்றும் அமெரிக்காவின் புதிய குடியேற்றக் கொள்கை உள்ளிட்ட பிற பிரச்னைகளாலும் இந்தியா-அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

கந்திலி போலீஸாா் விழிப்புணா்வு

SCROLL FOR NEXT