இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பீமண்ணா காந்த்ரே 102 வயதில் காலமானார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பீமண்ணா காந்த்ரே (வயது 102) வயது மூப்பினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக மூச்சுத் திணறல் பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்த பீமண்ணா காந்த்ரே, வெள்ளிக்கிழமை (ஜன. 16) இரவு காலமானார் என அவரது மகனும் கர்நாடக வனத்துறை அமைச்சருமான ஈஸ்வர் காந்த்ரே தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மூத்த தலைவர் பீமண்ணா காந்த்ரேவின் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி தலைமையிலான அமைச்சரவையில் பீமண்ணா காந்த்ரே போக்குவரத்து துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.
மேலும், கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் 4 முறை கர்நாடக சட்டப்பேரவையின் உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.