பயிற்சியில் ஈடுபட்ட அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் படம் - எக்ஸ்
இந்தியா

அமெரிக்கா - பாக். கூட்டு ராணுவப் பயிற்சி விஸ்வகுருவுக்கு பின்னடைவு! - மோடி அரசின் மீது காங்கிரஸ் தாக்கு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது காங்கிரஸ் விமர்சனம்...

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொண்டது, பிரதமர் நரேந்திர மோடியின் அரசுக்கு மற்றொரு பின்னடைவு என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பப்பி நகரத்தில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு மையத்தில் நடைபெற்ற “இன்ஸ்பயர்ட் கேம்பிட் 2026” எனும் பயிற்சியில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ராணுவங்கள் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டன.

இதனைத் தொடர்ந்து, இது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மற்றொரு பின்னடைவு என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டதாவது:

“தன்னைத்தானே விஸ்வகுருவாக அறிவித்துக்கொண்டவரின் (பிரதமர் மோடி) ராஜத்தந்திரங்களுக்கு ஏற்பட்ட மற்றொரு பின்னடைவு. பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் அசாதாரணமான கூட்டாளி, என கடந்த 2025 ஜூன் மாதம் அமெரிக்காவின் அப்போதைய ராணுவ உயர் அதிகாரி ஜெனரல் மைக்கல் குனிலா கூறியிருந்தார். பஹல்காம் தாக்குதல்களுக்கு முக்கிய காரணமாக இருந்து, வன்முறைகளைத் தூண்டக்கூடிய கருத்துகளைத் தெரிவித்த பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை பாராட்டியுள்ளார்.” எனக் கூறியுள்ளார்.

இத்துடன், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் தனது தலையீட்டால் நிறுத்தப்பட்டன என அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளதையும் ஜெய்ராம் ரமேஷ் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Congress has criticized the joint military exercise conducted by the United States and Pakistan, calling it another setback for Prime Minister Narendra Modi's government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிபிஎல் தொடரில் கலக்கும் ஸ்டீவ் ஸ்மித்..! டி20 உலகக் கோப்பையில் இடம் பெறுவாரா?

மகாராஷ்டிர தேர்தலில் தோல்வியடைந்த கட்சிகள் சுயபரிசோதனை செய்ய வேண்டும்: ஓவைசி

சுத்தமான குடிநீர் இல்லாத இந்தூர் பொலிவுறு நகரம்! ராகுல் விமர்சனம்

MGR-ரின் 109 ஆவது பிறந்தநாள்! சிலைக்கு மாலை அணிவித்து சசிகலா மரியாதை!

சாரா அர்ஜுனின் புதிய பட டிரைலர்!

SCROLL FOR NEXT