அமெரிக்காவில் இந்தியாவைப்போல பாகிஸ்தான் முதலீடு செய்வதில்லை என காங்கிரஸ் உறுப்பினர் ரிச் மெக்கார்மிக் கூறியுள்ளார்.
சர்வதேச ஆய்வுகள் மைய நிகழ்ச்சியில் அமெரிக்க குடியரசு கட்சி மற்றும் காங்கிரஸ் உறுப்பினருமான ரிச் மெக்கார்மிக் பேசுகையில், "பாகிஸ்தானில் 30 கோடி மக்கள்தொகை உள்ளன. ஆனால், அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் முதலீடுகளைக் கொண்டு வருவதில்லை. இந்தியாவில் முதலீடு செய்யப்படுவது மட்டுமின்றி, அமெரிக்காவுக்கும் இந்தியா முதலீடுகளைக் கொண்டு வருகிறது.
திறமை முக்கியமானது. இந்தியா மிகப்பெரிய அளவிலான திறமைகளை வழங்கி வருகிறது. திறமையான நபர்களையும் ஏற்றுமதி செய்து வருகிறது.
எனவே, இந்தியா போன்ற ஒரு நாட்டைத் தள்ளினால், அது அமெரிக்காவுக்குத்தான் பெரிய சிக்கலில் முடியும். இந்தியாவை நண்பர்களாக ஏற்றுக்கொண்டால், அமெரிக்காவுக்கு அமைதியும் செழிப்பும் கிடைக்கும். நாம் அவர்களை அந்நியப்படுத்தினால், அது நம் அனைவருக்கும் ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை இழிபறியாகி வரும்நிலையில், இந்திய முதலீடு குறித்து மெக்கார்மிக் பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.