முகப்பு
இந்தியா

வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டு சுற்றுப்பயணம் சென்றது ஏன்? பிரதமருக்கு கார்கே கேள்வி!

வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டு பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொண்டது ஏன்? என்று மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியது குறித்து...

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே - IANS
பகிர்:

வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டு பிரதமர் நரேந்திர மோடி, சுற்றுப்பயணம் மேற்கொண்டது ஏன்? என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார்.

விலை உயர்வு மற்றும் பணவீக்கம் தொடர்பாக மத்திய அரசு மீதான விமர்சனங்கள் குறித்து, மல்லிகார்ஜுன் கார்கே பேசியதாவது:

பிரதமர் மோடி பொதுமக்களிடம், 'தங்கம் வாங்காதீர்கள்; வெள்ளி வாங்காதீர்கள்; வெளிநாடுகளுக்கு செல்லாதீர்கள்' என்று கூறினார். ஒருபுறம், அவர் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகிறார். ஆனால் மறுபுறம், ஐந்து நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு சென்று, அவர் என்ன சாதித்தார்? அவர் இத்தாலியப் பிரதமருக்கு 'மெலோடி' சாக்லேட்டுகளை வழங்கினார். பார்லே நிறுவனத்தை விளம்பரப்படுத்த இத்தாலிக்குச் சென்றார்.

Advertisement

Advertisement

இதற்கு என்ன அவசியம்? நீங்கள் ஏன் 'அமுல்' போன்ற பால் கூட்டுறவு சங்கம் தயாரித்த பொருள்களை எடுத்துச் செல்லவில்லை? கர்நாடகத்தின் 'நந்தி' பொருள்களையோ? அல்லது 'மதர் டெய்ரி' யின் பொருள்களையோ? எடுத்துச் சென்றிருக்கலாம். அதற்குப் பதிலாக, நீங்கள் 'பார்லே' பொருள்களை எடுத்துக்கொண்டு சென்றீர்கள்.

இதுபோன்ற செயல்களைச் செய்யக்கூடாது. நமது நாட்டின் பிரதமரின் அந்தஸ்து சாக்லேட்டுகளை ஊக்குவிப்பதற்காக அல்ல. வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று மக்களுக்குச் சொல்கிறார். ஆனால், அவரே பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து மகிழ்கிறார் எனத் தெரிவித்தார்.

கடந்த மே 15 முதல் 20 வரை, பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

summary

Congress leader Mallikarjun Kharge on Monday questioned why Prime Minister Narendra Modi undertook a tour abroad after having advised against traveling to foreign countries.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.