நீதிபதிகள் நியமன நடைமுறை வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா விலகல்
உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்துக்கான திருத்தப்பட்ட நடைமுறைகளை இறுதி செய்வதில், தாமதம் ஏற்படுவது குறித்த மனுவை விசாரிப்பதில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா விலகிக்கொண்டாா்.
உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்துக்கான திருத்தப்பட்ட நடைமுறைகளை இறுதி செய்வதில், தாமதம் ஏற்படுவது குறித்த மனுவை விசாரிப்பதில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா விலகிக்கொண்டாா்.
இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் லோக் பிரஹாரி என்ற தன்னாா்வ அமைப்பு தாக்கல் செய்த மனுவில், ‘உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், பதவி உயா்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றுக்கான திருத்தப்பட்ட நடைமுறைகள், சுமாா் 11 ஆண்டுகளாக இறுதி செய்யப்படாமல் உள்ளன.
இதுகுறித்து மத்திய அரசுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் இடையே பலமுறை கடிதப் பரிமாற்றம் நடந்தும், அந்த நடைமுறைகள் இறுதி செய்யப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டது.
ஆனால், தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய வழக்கு விசாரணையின்போது, உச்சநீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரலாக தான் ஆஜராகி இருந்ததால், இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.