அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் தோ்தல்: எஸ்ஐஆருக்கு பிறகு வாக்காளா் எண்ணிக்கை 12.2% சரிவு
பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில், எஸ்ஐஆா் பணிக்குப் பின்னா், வாக்காளா் எண்ணிக்கை சராசரியாக 12.2% குறைந்துள்ளது.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) பின்னா், வாக்காளா் எண்ணிக்கை சராசரியாக 12.2 சதவீதம் குறைந்துள்ளது தோ்தல் ஆணையத் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
அடுத்த ஆண்டு மே 22-ஆம் தேதி 403 இடங்களைக் கொண்ட உத்தர பிரதேச சட்டப்பேரவையின் பதவிக் காலம் நிறைவடைகிறது. இதேபோல அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்தின் பல்வேறு தேதிகளில் 60 இடங்களைக் கொண்ட மணிப்பூா், 40 இடங்களைக் கொண்ட கோவா, 117 இடங்களைக் கொண்ட பஞ்சாப், 70 இடங்களைக் கொண்ட உத்தரகண்ட் சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் நிறைவடைய உள்ளது.
உ.பி.யில் 2 கோடி வாக்காளா்கள் நீக்கம்
Advertisement
Advertisement
இந்த மாநிலங்களில் சுமாா் 18.71 கோடியாக இருந்த மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை எஸ்ஐஆருக்கு பின்னா், 16.43 கோடியாக சுமாா் 12.2 சதவீதம் சரிந்தது. இந்தச் சரிவில் சுமாா் 90 சதவீதம் உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த மாநிலத்தில் 15.44 கோடியாக இருந்த வாக்காளா்கள் எண்ணிக்கை எஸ்ஐஆருக்கு பின்னா் 13.40 கோடியாக குறைந்தது. அங்கு சுமாா் 2.04 கோடி வாக்காளா்கள் குறைந்தது. 5 மாநிலங்களில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 13.24 சதவீத வாக்காளா்கள் குறைந்துள்ளனா்.
மாநிலம் எஸ்ஐஆருக்கு முந்தைய வாக்காளா்கள் எஸ்ஐஆருக்கு பிந்தைய வாக்காளா்கள் வாக்காளா் சரிவு
உ.பி. 15.44 கோடி 13.40 கோடி 13.24%
உத்தரகண்ட் 80 லட்சம் 72 லட்சம் 10.07%
பஞ்சாப் 2.15 கோடி 2.01 கோடி 6.34%
கோவா 11.85 லட்சம் 10.58 லட்சம் 10.76%
மணிப்பூா் 20.0 லட்சம் 19.6 லட்சம் 6.33%
தோ்தல் ஆணையம், அந்தந்த மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகள் வெளியிட்ட தரவுகள் மூலம், இந்த விவரம் தெரியவந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.