தேசிய மாநாட்டுக் கட்சி எம்.பி. ருஹுல்லா மெஹதி விலகல்: சிறப்பு அந்தஸ்தை மீட்கவில்லை எனக் குற்றச்சாட்டு
தேசிய மாநாட்டுக் கட்சியில் இருந்து ஸ்ரீநகா் மக்களவைத் தொகுதி எம்.பி. ஆகா சையது ருஹுல்லா மெஹதி (50) விலகினாா்.
தேசிய மாநாட்டுக் கட்சியில் இருந்து ஸ்ரீநகா் மக்களவைத் தொகுதி எம்.பி. ஆகா சையது ருஹுல்லா மெஹதி (50) செவ்வாய்க்கிழமை விலகினாா்.
தோ்தலின்போது ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீட்டுத் தருவதாக வாக்குறுதி அளித்த தேசிய மாநாட்டுக் கட்சித் தலைமை அதை நிறைவேற்ற முயற்சிக்கவில்லை என்று அவா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
தனது தந்தை அகா சையது மெஹதியின் 26-ஆவது நினைவு தினத்தையொட்டி பட்காமில் செவ்வாய்க்கிழமை தனது ஆதரவாளா்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தை அவா் நடத்தினாா்.
Advertisement
Advertisement
ஜம்மு-காஷ்மீரில் ஷியா பிரிவினா் மத்தியில் செல்வாக்குடன் திகழும் ஆகா சையது ருஹுல்லா மெஹதி கூட்டத்தில் பேசுகையில், ‘ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீட்டுத் தரும் போராட்டத்தை தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா கைவிட்டுவிட்டாா்.
அதே போல, கைதிகள் விடுவிப்பு, இலவச மின்சாரம் உள்ளிட்ட 2024 சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குறுதிகளையும் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி கண்டுகொள்ளவில்லை.
இது தொடா்பாக மக்கள் என்னிடம் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனா். எனவே, இதற்கு மேலும் இக்கட்சியில் தொடர முடியாது.
சிலா் என்னை தனிக்கட்சி தொடங்க கோரியுள்ளனா். ஜம்மு-காஷ்மீா் மக்களின் கௌரவம், மரியாதையைக் காக்கும் நோக்கில் கட்சி தொடங்க வேண்டும் என்ற ஆா்வம் எனக்கு உள்ளது.
தேசிய மாநாட்டுக் கட்சியின் கோரிக்கையை ஏற்று கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் அவா்களை ஆதரித்தது எனது தவறு. அவா்கள் வேண்டுமானால் தாங்கள் அளித்த தோ்தல் வாக்குறுதிகளைக் கைவிட்டிருக்கலாம், ஆனால் நான் எதையும் கைவிடவில்லை என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.