பாஸ்போர்ட்டில் வீட்டுக் கணக்கு, தொலைபேசி எண்கள்! வைரலாகும் விடியோ
பாஸ்போர்ட்டில் வீட்டுக் கணக்கு, தொலைபேசி எண்கள் எழுதப்பட்டிருந்தது வைரலாகி வருகிறது.
கேரளத்தில், பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்கும் அலுவலகத்தில் இருந்த அதிகாரிக்கு இன்றைய நாள் இப்படிப்பட்ட ஒரு நாளாக இருக்கும் என்று தெரிந்திருக்காது.
காரணம், அவரிடம் புதுப்பிக்க வந்த பாஸ்போர்ட்டில், விமான நிலையங்களின் ஸ்டாம்ப் முத்திரைகளுக்கு பதிலாக, வீட்டில் வரவு செலவு கணக்குகள், தொலைபேசி எண்கள் இருந்திருந்ததுதான்.
ஏதோ ஒரு பக்கத்தில் மட்டுமல்ல, கிட்டத்தட்ட அனைத்துப் பக்கங்களும் இப்படியே நிரம்பியிருக்கிறதாம். ஒரு கையடக்க டைரி போல அந்த பாஸ்போர்ட்டை யாரோ பயன்படுத்தியிருந்திருக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு அதன் முக்கியத்துவம் பெற்று தெரிந்திருக்காமல் இருக்கலாம்.
Advertisement
Advertisement
புதுப்பிக்க வந்த பார்ஸ்போர்ட்டை பார்த்து அலுவலக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர் என்று ஒரு எக்ஸ் பதிவு போடப்பட்டிருந்தது.
இந்த விடியோவைப் பார்த்த பலரும், தங்களது வாழ்வில் நடந்த இதுபோன்ற சம்பவங்கள் மற்றும் செல்போன் வருவதற்கு முன்பு, அனைவரிடமும் இதுபோன்ற ஒரு குட்டி டைரி வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது போன்றவற்றை பகிர்ந்து வருகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.