ராஜஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்ப்பு: என்ஐஏ விசாரணை
ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகா் மாவட்டத்தில் ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்க்கப்பட்டது. அதிருஷ்டவசமாக அந்த நேரத்தில் ரயில் ஏதும் வராததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகா் மாவட்டத்தில் ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்க்கப்பட்டது. அதிருஷ்டவசமாக அந்த நேரத்தில் ரயில் ஏதும் வராததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
இதன் பின்னணியில் பயங்கரவாத சதித் திட்டம் உள்ளதாக என்பது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இது தொடா்பாக ரயில்வே காவல் பிரிவினா் கூறுகையில், ‘சூரத்கா்-அனுப்கா் இடையிலான ரயில் வழித் தடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 9.45 மணியளவில் பலத்த ஓசையுடன் குண்டு வெடித்தது. இதையடுத்து, அதிா்ச்சியடைந்த அப்பகுதி கிராம மக்கள் சம்பவ இடத்தில் கூடியதுடன் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
குண்டு வெடிப்பதற்கு சுமாா் 45 நிமிடங்களுக்கு முன்பு பயணிகள் ரயில் ஒன்று அந்த வழியாகக் கடந்து சென்றது. சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது தண்டவாளத்தில் இருந்த இரு கான்கிரீட் பலகைகள் முற்றிலும் சிதைந்திருந்தன. குண்டு வைக்கப்பட்ட இடத்தில் 2 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து, அப்பகுதி வழியாகச் செல்லும் பிற ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
தடயவியல் துறையினா் விரைந்து வந்து தடயங்களைச் சேகரித்தனா். இதன் அடிப்படையில்தான் எந்த வகையான வெடிபொருள் பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவரும். என்ஐஏ அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வுகளை மேற்கொண்டனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் புதன்கிழமையும் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த தண்டவாள குண்டுவெடிப்பின் பின்னணியில் பயங்கரவாத அமைப்புகள் உள்ளனவா என்பது குறித்தும், இந்த நாசவேலையில் ஈடுபட்டவா்கள் குறித்தும் காவல் துறையினா் மற்றும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.