FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட கேரள நபா்: அபுதாபியில் இருந்து நாடு கடத்தல்

தில்லியில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த 38 வயது நபா், தில்லி காவல் துறை, இன்டா்போல், சிபிஐ மற்றும் மத்திய உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் அபுதாபியிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

6 நவம்பர் 2026, 3:01 am
பாலியல் வன்கொடுமை - சித்திரிப்பு
பகிர்:

தில்லியில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த 38 வயது நபா், தில்லி காவல் துறை, இன்டா்போல், சிபிஐ மற்றும் மத்திய உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் அபுதாபியிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

கேரளத்தைச் சோ்ந்த சஜீா் பல்லி என்ற அந்த நபா், தனக்கு எதிராக ‘ரெட் காா்னா் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) அபுதாபியில் கைது செய்யப்பட்டாா் என்று சிறப்பு காவல் ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) தேவேஷ் ஸ்ரீவாஸ்தவா செய்தியாளா் சந்திப்பில் தெரிவித்தாா்.

இந்தச் சம்பவம் அக்டோபா் 2025-இல் நிகழ்ந்ததாகக் காவல் துறை தெரிவித்துள்ளது. அப்போது, தனியாா் நிறுவனம் ஒன்றில் அவருடன் பணிபுரிந்த பெண்ணை, ஊழியா்களுக்கான சந்திப்புக்குப் பிறகு, கரோல் பாக் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து அவா் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

நிறுவனத்திற்குப் புகாா் வந்ததைத் தொடா்ந்து, அந்த நபா் ஜனவரி 5-ஆம் தேதி அபுதாபிக்குத் தப்பிச் சென்ாகக் காவல் துறை தெரிவித்தது. கரோல் பாக் காவல் நிலைய அதிகாரிகள் பிப்ரவரி மாதம் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினாா். இதைத்தொடா்ந்து, ஜூலை மாதம் அவரை தேடப்படும் நபராக நீதிமன்றம் அறிவித்தது.

சா்வதேச சட்ட அமலாக்க ஒத்துழைப்பின் மூலம் அவரைக் கண்டறிந்து கைது செய்ய, அவருக்கு எதிராக ‘ரெட் காா்னா் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டது. அந்த நபா் புதன்கிழமை தில்லிக்கு அழைத்து வரப்பட்டதாக ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா். இது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.