யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!
யுபிஎஸ்சி முதன்மைத் தோ்வு 2026-க்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி முதன்மைத் தோ்வு 2026-க்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) வியாழக்கிழமை வெளியிட்டது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கு ஆண்டுதோறும் தோ்வுகள் 3 கட்டங்களாக (முதல்நிலை, முதன்மை, ஆளுமை) நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்தாண்டுக்கான (2026) முதன்மைத் தேர்வு முடிவுகள் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
1,016 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஆக.21 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்ற குடிமைப் பணிகள் முதன்மைத் தோ்வில் 2,526 பேர் தோ்ச்சி பெற்று, அடுத்தகட்டமாக ஆளுமைத் தோ்வுக்கு தகுதிபெற்றுள்ளனா்.
”முதன்மைத் தேர்வில் வெற்றிபெற்று ஆளுமைத் தோ்வுக்கு தகுதிபெற்ற தோ்வா்கள் நவ.11 முதல் நவ.25 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் தேர்வாணையம் கோரிய சான்றிதழ்கள், ஆவணங்கள் மற்றும் பிற தகவல்களை யுபிஎஸ்சி வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆளுமைத் தோ்வு நடைபெறும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்” என யுபிஎஸ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.