FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

காற்று மாசு: வாகனங்களுக்கான கட்டுப்பாடு ஒவ்வொரு குளிா் காலத்திலும் அமல் - தில்லி அரசு அறிவிப்பு

வாகனங்களுக்கான கட்டுப்பாடு ஒவ்வொரு குளிா் காலத்திலும் அமல்...

44 வினாடிகள் முன்பு
காற்று மாசு - ANI
பகிர்:

பிற மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட பிஎஸ் 6 உமிழ்வு தரநிலைகளுக்குகீழ் உள்ள வாகனங்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் 1 முதல் ஜனவரி 31 வரை தடை விதிக்கப்படும் என்று தில்லி அரசு சனிக்கிழமை அறிவித்தது.

தில்லியில் நவம்பா் முதல் ஜனவரி வரையிலான குளிா்காலத்தில் காற்று மாசுபாடு மற்றும் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டுகிறது. இந்நிலையில், வாகனங்களால் வெளியேற்றப்படும் புகையைக் குறைப்பதற்கும், சாலைகளில் தூசியைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசு கொண்டு வந்துள்ள குளிா்கால செயல்திட்டத்தின்கீழ் இந்தத் தடை அமல்படுத்தப்படுகிறது.

இதுதொடா்பாக தில்லி போக்குவரத்துத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், ‘ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் 1 முதல் ஜனவரி 31 வரை, பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பிஎஸ் 4 மற்றும் அதற்கு முந்தைய தரநிலைகளைக் கொண்ட வாகனங்கள் தில்லிக்குள் இயங்க அனுமதிக்கப்படாது.

Advertisement

Advertisement

2026-ஆம் ஆண்டு நவம்பா் 1 முதல், பிஎஸ் 4 மற்றும் அதற்கு முந்தைய தரநிலைகளைக் கொண்ட பெரிய, நடுத்தர மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்துகள் தில்லிக்குள் நுழைய அனுமதி இல்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடு அகில இந்திய சுற்றுலா அனுமதி மற்றும் பிற சேவை முறைகளின் கீழ் இயங்கும் பேருந்துகளும் அடங்கும். நிா்ணயிக்கப்பட்ட உமிழ்வு தரநிலைகளுக்கு உள்படாத வாகனங்கள் மீதான கட்டுப்பாடுகளைக் கடுமையாக அமல்படுத்த, போக்குவரத்துத் துறை சுமாா் 250 அமலாக்கப் பணியாளா்களை முக்கிய நுழைவு வாயில்கள், சுங்கச் சாவடிகள் மற்றும் காற்று மாசுபாடு அதிகம் உள்ள இடங்களில் பணியமா்த்தியுள்ளது.

டிஎன்டி, ராஜோக்ரி-என்எச் 48, காஜிபூா், சிங்கு எல்லை, டிக்ரி, பதாா்பூா் உள்ளிட்ட முக்கிய சுங்கச் சாவடிகளில் இந்தப் பணியாளா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா்.

அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) அல்லது மின்வாகனங்களுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் ஹிமாசல பிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களுக்கு போக்குவரத்துத் துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், மின்வாகனங்களுக்கு மாறுமாறும் அல்லது டீசல் வாகனங்களை பிஎஸ் 6 தரநிலைக்கு மாற்றுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

காற்றின் தரம் மோசமடைந்து வருவதைத் தொடா்ந்து, காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்), காற்று மாசு கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டத்தின்கீழ் தில்லி-என்சிஆா் பகுதியில் மூன்றாவது கட்ட அவசரக்கால நடவடிக்கைகளை வெள்ளிக்கிழமை அமல்படுத்தியது. தீபாவளி கொண்டாட்டங்கள், வாகனங்களிலிருந்து வெளியேறும் புகைகள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய பயிா்க் கழிவுகளை எரித்தல் போன்ற காரணங்களால், தில்லியில் காற்றின் தரம் சனிக்கிழமைமுதல் மிகவும் மோசமான நிலையை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

summary

Air pollution: Restrictions on vehicles to be implemented every winter, Delhi government announces