FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நாட்டின் எல்லா இடத்திலும் என்னைக் கைது செய்யுங்கள், ஆனால்..! - கொச்சியில் தீப்கே பேச்சு!

கொச்சியில் நடைபெற்ற சிஜேபி போராட்டத்தில் அபிஜீத் தீப்கே பேசியது குறித்து...

கொச்சி போராட்டத்தில் சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே... - PTI
பகிர்:

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் என்னைக் கைது செய்யுங்கள், நான் மீண்டும் வந்து மூவர்ணக் கொடியை ஏந்துவேன் என கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில், சட்டவிரோதமான முறையில் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

இதையடுத்து, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கேரளத்தின் கொச்சி மாவட்டத்தில் சிஜேபி தலைமையில் இன்று (நவ. 7) நடைபெற்ற பேரணி மற்றும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட அபிஜீத் தீப்கே கூறியதாவது:

“மூவர்ணக் கொடியை ஏற்றியதற்காக நான் சிறையில் அடைக்கப்பட்டேன். என் சகோதரர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்காவும் அதற்காகச் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்தியாவில் கடைசியாக இதுபோன்று ஆங்கிலேயர் ஆட்சியில்தான் நடந்தது.

நான் நரேந்திர மோடிக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இந்த நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், எல்லா இடங்களுக்கும் இந்த மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்வேன். நீங்கள் என்னைக் கைது செய்ய விரும்பினால், தில்லியிலோ, மகாராஷ்டிரத்திலோ, கேரளத்திலோ அல்லது தமிழ்நாட்டிலோ என்னைக் கைது செய்யுங்கள். ஆனால், நான் மீண்டும் வந்து இந்த மூவர்ணக் கொடியை ஏந்துவேன்” எனக் கூறியுள்ளார்.

summary

Abhijit Dipke has stated, "Arrest me in any part of the country; I will return and hoist the tricolour flag once again."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.