குளிர்க்காலம்! கேதார்நாத் கோயில் நடை அடைப்பு!
குளிர்காலத்தை முன்னிட்டு கேதார்நாத் கோயிலின் நடை சடங்குகளுடன் மூடப்பட்டது..
குளிர்காலத்தை முன்னிட்டு உத்தரகண்டில் உள்ள பிரசித்த பெற்ற கேதார்நாத் கோயிலின் நடை இன்று காலை 8.30 மணிக்கு, வேத மந்திரங்கள் முழங்க முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு மூடப்பட்டது.
சிவபெருமானின் 12 வகையான ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேதார்நாத் கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து தரிசித்துச் செல்கின்றனர்.
Advertisement
Advertisement
இதற்கான பூஜைகள் அதிகாலை 4 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. பராம்பரிய வழக்கத்தின்படி அனைத்துச் சடங்குகளும் நிறைவேற்றப்பட்ட பிறகு, கோயிலின் கதவுகள் அடைக்கப்பட்டன.
கோயில் நடை அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கேதார்நாத் இறைவனின் பல்லக்கு கோயில் வளாகத்தைச் சுற்றி எடுத்து வரப்பட்டது. பின்னர், இறைவனின் குளிர்கால இருப்பிடமான உகிமத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோயிலை நோக்கிப் புறப்பட்டது.
இந்தப் பல்லக்கு புதன்கிழமை இரவு ராம்பூரில் தங்கும். மறுநாள் நவம்பர் 12 அன்று குப்தகாசியைச் சென்றடையும். நவம்பர் 13 அன்று, பல்லக்கு உகிமத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோயிலைச் சென்றடையும்.
அடுத்த ஆறு மாதங்களுக்கு, பக்தர்கள் உகிமத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோயிலில் இறைவனை வழிபடலாம். இந்த சடங்கு பூஜையில் திரளான பக்தர்க பங்கேற்றனர். குளிர்காலத்தை முன்னிட்டு அடுத்த ஆறு மாதங்கள் கோயிலின் நடை அடைக்கப்படும்.