கொல்கத்தா-சைராங் விரைவு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: பயணிகள் பலர் காயம்
கொல்கத்தா-சைராங் விரைவு ரயின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது குறித்து...
அசாம்: மிசோரம் மாநிலத்தில் இருந்து கொல்கத்தா நோக்கி வந்து கொண்டிருந்த கொல்கத்தா-சைராங் விரைவு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பலர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிசோரம் மாநிலம் சைராங்கில் இருந்து கொல்கத்தா நோக்கி வந்து கொண்டிருந்த கொல்கத்தா-சைராங் விரைவு பயணிகள் ரயில்(ரயில் எண்: 13125), புதன்கிழமை காலை 6.54 மணியளவில், காம்ரூப் மாவட்டத்தில் உள்ள டிகாரு ரயில் நிலையத்தில், ரயில் இன்ஜின் உள்பட ஆறு பெட்டிகள் தடம் புரண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
தகவல் அறிந்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்றுள்ளனர். பயணிகளுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
வடகிழக்கு எல்லை ரயில்வே தகவலின்படி, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்; யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. பயணிகள் மாற்று ரயில் மூலம் தங்கள் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தண்டவாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அந்த வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், "நான் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது விபத்து குறித்து அறிந்தேன். உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது விபத்து டிகாரு ரயில் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் நடந்துள்ளது. ரயின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டிருந்தது. இதில், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ரயிலில் பிரேக் கோளாறு ஏற்பட்டதே விபத்துக்கு காரணம் என கூறப்படுவதாக அவர் கூறினார்.