நவ. 14-ல் கிக் தொழிலாளர் நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் ராகுல்!
ஹைதராபாத்தில் கிக் தொழிலாளர்களின் முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்கும் ராகுல்..
தெலங்கானாவில் கிக் தொழிலாளர்களின் முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நவம்பர் 14 அன்று ஹைதராபாத் வருகை தர உள்ளார்.
ஹைதராபாத் சர்வதேச மாநாட்டு மையம் (எச்ஐசிசி) அருகே பேரணி மற்றும் தொழிலாளர்களுடனான நேரடி கலந்துரையாடல் நடத்த ராகுல் திட்டமிடப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சிக்காக தெலங்கானா அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின்போது, மாநிலத்தின் கிக் தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் உள்ள முக்கிய விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் நலத்திட்டங்களை ராகுல் காந்தி தொடங்கி வைக்கிறார். டெலிவரி ஊழியர்கள், வாடகைக் கார் ஓட்டுநர்கள் மற்றும் பிற பிளாட்ஃபார்ம் சார்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட கிக் தொழிலாளர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, மாநில அமைச்சர்கள் பொன்னம் பிரபாகர் ற்றும் கடாம் விவேக் வெங்கடசாமி ஆகியோர் எச்ஐசிசி-க்கு அருகிலுள்ள ஜெயபேரி மற்றும் மீனாட்சி டவர்ஸ் அருகே இடத்தை ஆய்வு செய்தனர். நவம்பர் 14 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் தயார்நிலையையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களுக்கு தெலங்கானா அரசு அளித்த வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதில், அடுத்தகட்ட நடவடிக்கையாக அமைவதால், இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது.
தெலங்கானா பிளாட்ஃபார்ம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் (பதிவு, சமூகப் பாதுகாப்பு மற்றும் நலன்) சட்டம், 2026, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்டு ஜூன் 2 அன்று அமலுக்கு வந்தது.
தெலங்கானா கிக், பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவனரும் மாநிலத் தலைவருமான ஷேக் சலாவுதீன், பாரத் ஜோடோ யாத்திரை மற்றும் அதைத் தொடர்ந்த தேர்தல் பிரசாரங்களின் போது தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுடன் இது தொடர்புடையதால், ராகுல் காந்தியின் வருகை முக்கிய நிகழ்வாக அமையும் என்று அவர் கூறினார்.