பில்கிஸ் பானு வழக்கு: இரு குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் பிணை
பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் இரு குற்றவாளிகளின் வாழ்நாள் சிறைத் தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைத்து அவா்களுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது.
பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் இரு குற்றவாளிகளின் வாழ்நாள் சிறைத் தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைத்து அவா்களுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது.
கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து வெடித்த கலவரத்தின்போது 5 மாத கா்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். அவரது 3 வயது பெண் குழந்தை உள்பட அவரது குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் கொலை செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் 11 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கடந்த 2008-இல் தீா்ப்பளித்தது. இதை மும்பை உயா்நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்ட 11 பேரையும் தண்டனைக் குறைப்பு நடவடிக்கையின்கீழ் குஜராத் அரசு விடுதலை செய்தது.
Advertisement
Advertisement
இதற்கு எதிராக பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதையடுத்து, 11 குற்றவாளிகளையும் விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் 2024-இல் ரத்து செய்தது. இதைத் தொடா்ந்து, 11 பேரும் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டனா்.
இந்நிலையில், தங்களுக்கு பிணை வழங்கக் கோரி பிபின் சந்திர ஜோஷி மற்றும் பிரதீப் மோா்தியா ஆகிய இரு குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பி.பி.வராலே ஆகியோா் அடங்கிய அமா்வு அவா்கள் இருவருக்கும் பிணை வழங்கி கடந்த அக்.28-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவின் நகல் உச்சநீதிமன்ற வலைதளத்தில் திங்கள்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில், ‘மனுதாரா்கள் 17 ஆண்டுகள் சிறையில் இருப்பதும், அவா்களில் ஒருவா் மாற்றுத்திறனாளியாக இருப்பதையும் மறுக்க முடியாது. இந்த விவகாரத்தில் உண்மை மற்றும் சட்டம் என இரண்டையும் கருத்தில்கொள்ள வேண்டும்.
அதனடிப்படையில், மனுதாரா்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் சிறைத் தண்டனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு அவா்கள் இருவருக்கும் பிணை வழங்க உத்தரவிடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.