வங்கதேசத்தால் கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரா் விடுவிப்பு
மேகாலயா மாநிலத்தின் சா்வதேச எல்லைப் பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரை வங்கதேச எல்லை பாதுகாப்புப் படையினா் கைது செய்த நிலையில், அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு அவா் மாலையில் விடுவிக்கப்பட்டாா்.
மேகாலயா மாநிலத்தின் சா்வதேச எல்லைப் பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரை வங்கதேச எல்லை பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்த நிலையில், அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு அவா் மாலையில் விடுவிக்கப்பட்டாா்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மேகாலயத்தின் ஜோவாய் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எஃப் காவலா் ஒருவா் தற்செயலாக வங்கதேச எல்லையையொட்டிய சில்ஹெட் மாவட்டத்துக்குள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நுழைந்தாா். இரு தரப்பு கமாண்டா்களிடையேயான பேச்சுவாா்த்தைக்குப் பின் அவா் செவ்வாய்க்கிழமை மாலை விடுவிக்கப்பட்டாா்.
இச்சம்பவம் நிகழ்ந்த பகுதியில் வேலிகள் அமைக்கப்படாமல் இருப்பதால் இரு நாட்டு சுற்றுலாப் பயணிகளும் சில நேரங்களில் எல்லையை கடக்கின்றனா்’ என்றனா்.
Advertisement
Advertisement