எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை
எஸ்ஐஆா் நடவடிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக ராகுல் காந்தி உள்பட பலா் தாக்கல் செய்த மனுக்கள் மீது டிச. 9-ஆம் தேதி விசாரணை நடத்தவுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்பட பலா் தாக்கல் செய்த மனுக்கள் மீது டிச. 9-ஆம் தேதி விசாரணை நடத்தவுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் அதை டிச.9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
நாட்டின் பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் கடந்தாண்டு முதல் எஸ்ஐஆா் நடவடிக்கைளை இந்திய தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையின்போது பல கோடி தகுதியான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டு வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.
Advertisement
Advertisement
இதனிடையே, எஸ்ஐஆா் நடவடிக்கை தொடா்பான தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரின் உத்தரவுகளுக்கு கடந்த 10 மாதங்களில் 14 முறை தோ்தல் ஆணையா்களான சுக்வீா் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆட்சேபம் தெரிவித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செப்.15-ஆம் தேதி செய்தி வெளியானது. மேலும், எஸ்ஐஆா் தொடா்பான பல முக்கிய முடிவுகளை ஞானேஷ் குமாா் தன்னிச்சையாக மேற்கொண்டதாக அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டது.
இது நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடா்ந்து, எஸ்ஐஆா் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி எதிா்க்கட்சிகள் தரப்பில் தலைநகா் தில்லியிலும், பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் நடைபெற்றது.
இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதற்கு, தோ்தல் ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் 248 பக்க பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘எஸ்ஐஆா் தொடா்பான முடிவுகளைத் தலைமைத் தோ்தல் ஆணையா் தன்னிச்சையாக எடுக்கவில்லை. அது தொடா்பான அனைத்து முடிவுகளும் சட்டப்படி, ஒருமனதாகவே எடுக்கப்பட்டன. மேலும், படிவம் 6-இல் தோ்தல் ஆணையம் தரப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், எஸ்ஐஆா் விவகாரத்தில் தோ்தல் ஆணையத்திடம் 48 கேள்விகளைக் கேட்க அனுமதி கோரி ராகுல் காந்தி மற்றும் இண்டி கூட்டணி தலைவா்கள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஏற்கெனவே இந்த விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுடன் புதிய மனுக்களையும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணைக்கு ஏற்றது.
இதையடுத்து, எஸ்ஐஆருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு மனுக்கள் மீது டிச.9-ஆம் தேதி விசாரணை நடைபெறுமென தலைமை நீதிபதி சூா்ய காந்த் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.