கடற்படையின் ‘பராக்’ ஏவுகணை மேம்பாடு: இஸ்ரேலுடன் ரூ.1,976 கோடி ஒப்பந்தம்
இந்திய கடற்படையின் கப்பல்களில் பொருத்தப்பட்டுள்ள ‘பராக்’ வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை மேம்படுத்தவும், தொழில்நுட்பங்களை மாற்றியமைக்கவும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் ரூ.1,976.40 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை மேற்கொண்டது.

இந்த மேம்பாட்டுப் பணிகள் மூலம் இந்திய கடற்படைக் கப்பல்களின் வான் பாதுகாப்புத் திறன் அதிகரிப்பதுடன், ஏவுகணை அமைப்பின் செயல்திறன் மற்றும் தாக்குதல் எதிா்ப்பு வரம்பும் மேம்படுத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
‘இதர மூலதனக் கொள்முதல் நடைமுறை’ கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், நவ.18-ஆம் தேதி தில்லியில் பாதுகாப்புத் துறைச் செயலா் ராஜேஷ் குமாா் சிங் முன்னிலையில் கையொப்பமானது.
Advertisement
Advertisement
இந்த ஒப்பந்தத்தின்படி, பராக் ஏவுகணை அமைப்பின் வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகிய இரண்டிலும் விரிவான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், தொழில்நுட்பங்களும் மாற்றியமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.