பண்டிகைக் கால சிறப்பு ரயில்களில் 1.82 கோடிக்கும் அதிகமானோர் பயணம்: வடக்கு ரயில்வே
பண்டிகைக் கால சிறப்பு ரயில்களில்1 கோடிக்கும் அதிகமானோர் பயணம் செயதுள்ளது குறித்து...
நடப்பு ஆண்டு பண்டிகைக் கால சிறப்பு ரயில்களில் 1.82 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயனம் செய்துள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பூஜா மற்றும் பண்டிகைக் காலங்களில், சுமார் 1.82 கோடி பயணிகள் பயணம் செய்ததாகவும், கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில், அதிகமாக சுமார் 10 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர் என வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
பயணத் திறனை அதிகரித்தல், கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்குதல், ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்துதல் மற்றும் பயணிகளின் தேவையைத் தொடர்ந்து கண்காணித்தல் ஆகியவற்றின் மூலம், வடக்கு ரயில்வே தனது முந்தைய ஆண்டு செயல்பாட்டு அளவீடுகளை விடச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.
வடக்கு ரயில்வேயின் தகவல்படி, தீபாவளி மற்றும் சத் பூஜா பண்டிகைக் காலங்களில் மொத்தம் 7,085 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன; இது கடந்த ஆண்டு 4,666 ஆக இருந்தது. அதாவது, பண்டிகைக் கால கூட்ட நெரிசலைச் சமாளிப்பதற்காக நாளொன்றுக்கு சராசரியாக கூடுதலாக 54 கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. நாள்தோறும் கையாளப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையும் சுமார் 3 லட்சத்து 91 ஆயிரத்திலிருந்து 4 லட்சத்து 14 ஆயிரமாக உயர்ந்துள்ளது; இதன் மூலம் நாள்தோறும் கூடுதலாக சுமார் 22 ஆயிரத்து 700 பயணிகள் பயணம் செய்ய முடிந்தது. வழக்கமான ரயில் சேவைகள் மூலமாக சுமார் 1 கோடியே 66 லட்சம் பேரும், தேவைக்கேற்ப இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலமாக 12 லட்சத்து 83 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.
அதிகத் தேவை கொண்ட வழித்தடங்களில் பயணத் திறனை அதிகரிக்க, வடக்கு ரயில்வே இந்த ஆண்டு வழக்கமான ரயில்களுடன் 581 கூடுதல் பெட்டிகளை இணைத்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 123 பெட்டிகள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தன; இது இந்த ஆண்டு சுமார் 372 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ரயில்களின் எண்ணிக்கையை முன்கூட்டியே அதிகரித்ததுடன், கூட்ட நெரிசல் மற்றும் பயணிகளின் தேவையை உரிய நேரத்தில் கண்காணிப்பட்டதன் மூலம், வடக்கு ரயில்வே மண்டலத்தில் பயணம் செய்த லட்சக்கணக்கான மக்களுக்கு நம்பகமான போக்குவரத்து வசதியையும், கூடுதல் சௌகரியத்தையும் வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.