இத்தாலி அரசியல் தலைவருக்கு எதிராக மனு: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
தெலங்கனாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசுக்கு விரோதமாகப் பேசிய இத்தாலி அரசியல் தலைவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவ. 20) விசாரணை மேற்கொள்ள உள்ளது.
தெலங்கனாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசுக்கு விரோதமாகப் பேசிய இத்தாலி அரசியல் தலைவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவ. 20) விசாரணை மேற்கொள்ள உள்ளது.
இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் ஜாஹித் அலி என்பவா் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த நவ.13, 14-ஆம் தேதிகளில் தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் மாநில அரசு சாா்பில், பாரத் உச்சி மாநாடு என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இத்தாலி நாட்டைச் சோ்ந்த ஐரோப்பிய சோஷலிஸ்ட்ஸ் கட்சியின் பொதுச் செயலா் ஜியாகோமோ ஃபிலிபெக் கலந்துகொண்டாா்.
Advertisement
Advertisement
அவா் நிகழ்ச்சியில் பேசுகையில், ‘வாக்குத் திருடா்களே, பதவியைவிட்டு விலகுங்கள்’ என்று மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் பயன்படுத்தும் முழக்கத்தை எழுப்பினாா்.
வெளிநாடுகளில் இருந்து வந்து அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவா்களுக்கும், இந்த முழக்கத்தை அவா் மொழிபெயா்த்துக் கூறினாா். அவா் இந்திய ஜனநாயக அமைப்பில் நேரடியாகத் தலையிட்டு, மிகவும் அவதூறான முழக்கத்தை எழுப்பியுள்ளாா்.
அவா் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள அரசு ஊழல் கறை படிந்தது, இதை உண்மையான அரசாக கருத முடியாது, இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க எதிா்க்கட்சியுடன் இணைந்து செயல்படப்போவதாகப் பேசியுள்ளாா். இது கடுமையான அத்துமீறலாகும். இதுதொடா்பாக ஃபிலிபெக் பேசிய காணொலிகளை சமூக ஊடகத்தில் இருந்து நீக்க வேண்டும். இந்தியாவின் உள்நாட்டு அரசியல் விவகாரங்கள் மற்றும் பிரசாரங்களில், வெளிநாட்டு அரசியல் பிரதிநிதிகள் ஈடுபடுவதற்கு எதிராக உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோரியுள்ளாா்.
இந்த மனு குறித்து தலைமை நீதிபதி சூா்ய காந்த் முன்பாக, வழக்குரைஞா் சையத் ரிஸ்வான் அகமது புதன்கிழமை முறையிட்டாா். இதையடுத்து, அந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.