FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜம்மு-காஷ்மீரில் மோதல்! லஷ்கர்-இ-தொய்பா தளபதியை சுற்றிவளைத்த இந்திய ராணுவம்!

ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் ​​லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி சுற்றிவளைக்கப்பட்டார்.

9 வினாடிகள் முன்பு
லஷ்கர்-இ-தொய்பா தளபதி லத்தீஃப்.
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் ​​லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி சுற்றிவளைக்கப்பட்டார்.

ஜம்மு - காஷ்மீரின் குல்காமில் கடந்த நவ. 11 ஆம் தேதி அக்ரானில் உள்ள மத்திய ரிசர்வ் படை அதிகாரிகள் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

Advertisement

Advertisement

இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த உமர் நிசர் தார் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து குல்காம் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் உமர் நிசரின் கூட்டாளியான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி லத்தீஃப் பட் தாக்குதல் நடத்தியது தெரிவந்தது. அதனைத் தொடர்ந்து ராணுவத்தினரும் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலுக்கு முன்னதாக உமர் நிசர் மற்றும் லத்தீஃப் இருவரும் மிர் பஜார், அக்ரான், ஹப்லிஷ் மற்றும் கிலாம் உள்ளிட்ட இடங்களை நோட்டமிட்டதையும் கண்காணிப்பு கேமராக்களில் கண்டறிந்த காவல்துறையினர் அந்த விடியோக்களை வெளியிட்டுள்ளனர். மேலும், லத்தீஃப் ஒளிந்திருக்கும் இடத்திலிருந்து அதிகாரி ஒருவருடன் காணொளி அழைப்பில் பேசும் விடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த விடியோவில், “நாங்கள் இங்குதான் இருக்கிறோம்” என்று அந்த அதிகாரி கூறுவதும், அதற்கு லத்தீஃப். “நான் அல்லாவை சந்திக்க விரும்புகிறேன். நான் சந்தோஷமாக இருக்கிறேன்” என்று கூறுவதும் அதில் பதிவாகியுள்ளது.

குல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், லத்தீஃப் அங்குள்ள மசூதி ஒன்றில் ஒளிந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

summary

Top Lashkar-e-Taiba (LeT) commander Latief Bhat was cornered during a fresh encounter between security forces and terrorists in Jammu and Kashmir's Kulgam district on Wednesday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.