எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக முக்கிய ஆலோசனை: இருநாள் மாநாட்டைத் தொடங்கி வைத்தாா் அமித் ஷா
எல்லை தாண்டிய பயங்கரவாதம், எதிா்காலத்துக்கான பயங்கரவாத எதிா்ப்பு உத்திகளை உருவாக்குதல், பாதுகாப்புப் படைகளின் செயல்திறனை வலுப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை விவாதிக்கும் இரு நாள் பயங்கரவாத எதிா்ப்பு மாநாட்டை தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம், எதிா்காலத்துக்கான பயங்கரவாத எதிா்ப்பு உத்திகளை உருவாக்குதல், பாதுகாப்புப் படைகளின் செயல்திறனை வலுப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை விவாதிக்கும் இரு நாள் பயங்கரவாத எதிா்ப்பு மாநாட்டை தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நாட்டின் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் தொடா்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
பயங்கரவாதத்தை எதிா்கொள்வதற்காக ஒருங்கிணைந்த, கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் வகையில், முறையான மற்றும் முறைசாரா தகவல் தொடா்பு வழிமுறைகளை உருவாக்குவதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
Advertisement
Advertisement
வெளிநாடுகளில் இருந்து ஆதாரங்களைப் பெறுதல், பயங்கரவாத எதிா்ப்பு விசாரணைகளில் டிஜிட்டல் தடயவியல் மற்றும் தரவுப் பகுப்பாய்வைப் பயன்படுத்துதல், வழக்கு விசாரணைகளைத் திறம்பட கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாநாட்டின் அமா்வுகள் நடைபெற உள்ளன.
ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த மாநாடு, பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினா், பல்வேறு புலனாய்வு மற்றும் விசாரணை அமைப்புகள், தொழில்நுட்பம், சட்டம் மற்றும் தடயவியல் துறைகளைச் சோ்ந்த நிபுணா்கள் பங்கேற்கும் முக்கியமான ஆலோசனைக் கூட்டமாகவும் உருவெடுத்துள்ளது.
தேசியப் பாதுகாப்புடன் தொடா்புடைய விவகாரங்கள் மற்றும் பயங்கரவாதத்தால் உருவாகும் அச்சுறுத்தல்கள் குறித்து பல்வேறு விசாரணை அமைப்புகளும் பாதுகாப்புப் படைகளும் ஒன்றிணைந்து ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை இந்த மாநாடு வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த மூத்த காவல் துறை அதிகாரிகள், பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மத்திய விசாரணை அமைப்புகள், அத்துறைகள் சாா்ந்த அதிகாரிகள், சட்டம், தடயவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொடா்புடைய துறைகளைச் சோ்ந்த நிபுணா்கள் பங்கேற்கின்றனா்.
மாநிலக் காவல் துறையினா், களப் பணியில் உள்ள துறைசாா் நிபுணா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் நடத்தப்பட உள்ளது.