FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

புதிய வேலைவாய்ப்பு, சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொள்ள உதவும் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தளங்கள்: நிதின் கட்கரி

சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொள்ள உதவும் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தளங்கள் குறித்து....

11 வினாடிகள் முன்பு
மத்திய அமைச்சா் நிதின் கட்கரி - கோப்புப் படம்
பகிர்:

புது தில்லி: நாட்டில் கோடிக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதோடு, சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொள்வதிலும் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தளங்கள் உதவி வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

புது தில்லியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால், உபர், ஓலா, ராபிடோ, பாரத் டாக்ஸி, ஸோமோட்டோ, ஸ்விக்கி மற்றும் போர்ட்டர் ஆகியவற்றுடன் இணைந்து நடைபெற்ற 'ரைடு-இந்தியாவை முன்னோக்கி நகர்த்துதல்' நிகழ்வில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று பேசினார்.

Advertisement

Advertisement

அப்போது, செயலி அடிப்படையிலான சேவைகள், பயணிகள் போக்குவரத்தோடு நின்றுவிடாமல், உணவு விநியோகம் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய துறைகளிலும் விரிவடைந்து பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்களுக்குப் புதிய வாழ்வாதார வழிகளை உருவாக்கியுள்ளது.

சமூகம், பொருளாதாரம் மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய பிரிவினர்களுக்கு வேலைவாய்ப்புகளை எளிதாக்குவதற்கான, மோட்டார் வாகன ஒருங்கிணைப்பு கட்டமைப்பை அனைத்து மாநிலங்களும் பரவலாகப் பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் கட்கரி எடுத்துரைத்தார்.

தொழில்நுட்பத் தலையீடுகள் பாரம்பரியத் தொழில்களை எவ்வாறு மாற்றியமைத்து, உடல் உழைப்பைக் குறைக்க முடியும் என்பதற்கு மின் ஆட்டோக்கள் மற்றும் மின் பேருந்துகள் ஓர் அறிமுகம். குறிப்பாக கிராமப்புறங்களில் கடைசி மைல் இணைப்பை வலுப்படுத்துவதன் மூலம், மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சந்தைகளை எளிதாக அணுகுதல், விவசாய விளைபொருள்களை நகர்ப்புறங்களுக்குக் கொண்டு செல்லவும் வழிவகுக்கிறது என்றார்.

மேலும், டிஜிட்டல் போக்குவரத்துச் சூழலில் ஓட்டுநர்கள் மிக முக்கியமான பங்குதாரர்கள் என்றும், அவர்களது நலன், பணிச்சூழல் மற்றும், கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கட்கரி கூறினார்.

Gadkari has emphasised the role of technology, innovation, entrepreneurship and digital platforms in creating employment opportunities and addressing socio-economic challenges.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.