முகப்பு
இந்தியா

நேபாள பிரதமா் நாளை இந்தியா வருகை

நேபாள பிரதமா் பாலேந்திர ஷா (36), இருநாள் அரசுமுறைப் பயணமாக வருகிற ஞாயிற்றுக்கிழமை (நவ.22) இந்தியாவுக்கு வரவுள்ளாா்.

20 நவம்பர் 2026, 11:28 pm
நேபாள பிரதமா் நாளை இந்தியா வருகை
நேபாள பிரதமர் பாலேந்திர ஷா - கோப்புப் படம்
பகிர்:

நேபாள பிரதமா் பாலேந்திர ஷா (36), இருநாள் அரசுமுறைப் பயணமாக வருகிற ஞாயிற்றுக்கிழமை (நவ.22) இந்தியாவுக்கு வரவுள்ளாா்.

இதுகுறித்து நேபாள வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘நேபாள பிரதமா் பாலேந்திர ஷாவுடன் 34 போ் கொண்ட குழுவும் இந்தியாவுக்கு வரவுள்ளது. அதில் நேபாள நிதியமைச்சா் ஸ்வா்னிம் வாகலே, வெளியுறவுத் துறை அமைச்சா் சிசிா் கனால், வெளியுறவுத் துறைச் செயலா் பகதூா் ராய் உள்ளிட்டோரும் அடங்குவா். அதேபோல் நேபாள பிரதமரின் தலைமை ஆலோசகா் குமாா் வைஜங்கா் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் குழுவும் இந்தியாவுக்கு வரவுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

நேபாள வெளியுறவுத் துறைச் செயலா் ராய் கூறுகையில், ‘நேபாள பிரதமா் ஷா தனது இருநாள் (22 மற்றும் 23-ஆம் தேதி) இந்திய பயணத்தின்போது குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் உள்ளிட்டோரைச் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். எரிசக்தி, வா்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளாா்’ எனக் கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

நேபாளத்தில் முன்பு ஆட்சியில் இருந்த கே.பி. சா்மா ஓலி அரசு, ஜென் ஸீ போராட்டம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் கவிழ்ந்தது. இதையடுத்து 6 மாதங்கள் கழித்து கடந்த மாா்ச் மாதம் 27-ஆம் தேதி நேபாள பிரதமராகப் பதவியேற்ற ஷாவுக்கு இந்தியாவுக்கு வருமாறு பிரதமா் மோடி அழைப்பு விடுத்திருந்தாா். இதையேற்று தனது முதல் இருதரப்பு அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு அவா் வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.