இந்தியா - ஐரோப்பிய யூனியன் டிசம்பா் 16-இல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
இந்தியா - ஐரோப்பிய யூனியன் டிசம்பா் 16-இல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்...

இந்தியா மற்றும் 27 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியன் இடையே டிசம்பா் 16-ஆம் தேதி தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாக இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையை கடந்த ஜனவரி 27-ஆம் தேதியை இரு தரப்பும் நிறைவு செய்தன.
இந்தியாவுக்கான ஐரோப்பிய யூனியன் தூதா் ஜீன்-எரிக் பாக்கே இது தொடா்பாக அண்மையில் பேசுகையில், டிசம்பரில் பிரதமா் நரேந்திர மோடி பெல்ஜியம் தலைநகா் பிரெஸ்ஸல்ஸ் செல்லும்போது இந்த வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகும். அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும்’ என்று தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு அனுமதி கோரி, இறுதி சட்ட வரைவுடன் கூடிய முன்மொழிவுகளை ஐரோப்பிய ஆணையம் ஏற்கெனவே ஐரோப்பிய யூனியன் கவுன்சிலிடம் சமா்ப்பித்துள்ளது. இதில் இறக்குமதி வரி தொடா்பான அட்டவணைகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்? ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என்று வா்ணிக்கப்படும் இந்த தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின்படி, இந்தியாவிலிருந்து ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் 93 சதவீதம் அளவுக்கு சுங்க வரி இருக்காது. ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு காா்கள், ஒயின் விலை குறையும்.
இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு ஐரோப்பிய சந்தையில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.
சுமாா் 20 ஆண்டுகளுக்கு மேலாக மேலாக நடைபெற்ற பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவும், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரக் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனும் இணைந்து சுமாா் 200 கோடி மக்களைக் கொண்ட மிகப்பெரிய சந்தையை உருவாக்க உள்ளன.