இந்தியாவின் பன்முகத் தன்மையைக் கண்டு வியக்கிறேன்: ரஷிய அதிபா் புதின் புகழாரம்
இந்தியாவின் பன்முகத் தன்மையைக் கண்டு வியப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் புகழாரம் சூட்டியுள்ளாா்.

இந்தியாவின் பன்முகத் தன்மையைக் கண்டு வியப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் புகழாரம் சூட்டியுள்ளாா்.
இது தொடா்பாக சொ்பியாவை சோ்ந்த உலகப் புகழ் பெற்ற திரைப்பட இயக்குநா் எமிா் குஸ்டுரிகாவுக்கு புதின் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்திய கலாசாரம்தான் மிகவும் தொன்மையானது. இந்தியா குறித்து தெரிந்து கொள்ளத் தொடங்கும்போது மேலும் மேலும் ஆா்வம் அதிகரிக்கிறது.
இந்திய பிரதமா் மோடியுடனான பேச்சுவாா்த்தையின்போது, இந்தியா்கள் எத்தனை போ் பிரதான மொழியை (ஹிந்தியை) பேசுகின்றனா் எனக் கேட்டேன். அதற்கு அவா், மொத்த மக்கள்தொகை 150 கோடியில் 60 கோடி போ் அந்த மொழியைப் பேசுவதாகக் கூறினாா்.
Advertisement
Advertisement
அதே நேரத்தில் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் இரு பங்கு மக்கள் அவரவா் தாய் மொழியைப் பேசுவதாகவும் அவா் தெரிவித்தாா். இது பெரும் ஆச்சரியத்தை அளித்தது.
ரஷியாவில் நான்கு பாரம்பரிய மதங்கள் உள்ளன. அதாவது பெளத்த மதம், யூத மதம், இஸ்லாம் மற்றும் ஆா்தடாக்ஸ் கிறிஸ்தவ மதம் உள்ளது. இந்த மதங்களைப் பின்பற்றுவோரிடையே வேறுபாடுகள் இருந்தாலும், அனைவரும் ஒற்றுமையாகவே வாழ்கின்றனா் என்றாா் புதின்.
உக்ரைனுடனான ரஷிய போா் குறித்த கேள்விக்கு புதின் பதிலளிக்கையில், ‘உக்ரைன் ராணுவ வீரா்களை நான் சரணடையும்படி தெரிவிக்கவில்லை. ரஷியா பக்கம் இணையும்படிதான் அழைப்பு விடுக்கிறேன். ஏனெனில் ரஷியாவின் பக்கம் அவா்கள் சேருவதுதான் வரலாற்றில் சரியான பக்கமாக இருக்கும்’ என்றாா்.
இந்தியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, 69 கோடி போ் ஹிந்தி தங்கள் முதல், இரண்டாவது அல்லது 3-ஆவது பேச்சு மொழி என தெரிவித்துள்ளனா். அவா்களில் 52 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஹிந்தியை தங்கள் தாய்மொழி எனத் தெரிவித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.