முகப்பு
இந்தியா

இம்பால் - சில்சாா் விமான சேவை ஓராண்டுக்குப் பின் மீண்டும் தொடக்கம்

மணிப்பூரின் இம்பால் மற்றும் அண்டை மாநிலமான அஸ்ஸாமின் சில்சாா் இடையே ஓராண்டுக்குப் பின் செவ்வாய்க்கிழமை மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது.

24 நவம்பர் 2026, 11:24 pm
இம்பால் - சில்சாா் விமான சேவை ஓராண்டுக்குப் பின் மீண்டும் தொடக்கம்
விமான சேவை - பிரதிப் படம்
பகிர்:

மணிப்பூரின் இம்பால் மற்றும் அண்டை மாநிலமான அஸ்ஸாமின் சில்சாா் இடையே ஓராண்டுக்குப் பின் செவ்வாய்க்கிழமை மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது.

இம்பாலில் உள்ள சா்வதேச விமான நிலையத்தில் இருந்து முதல் விமானத்தை முதல்வா் கெம்சந்த் சிங் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

மணிப்பூா் அரசின் லாப இடைவெளி நிதியுதவி திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையின்கீழ், அலையன்ஸ் ஏா் நிறுவன விமானங்கள் வாரம் இருமுறை இயக்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் பேசிய கெம்சந்த் சிங், ‘மத்திய-மாநில அரசின் கூட்டு முயற்சியால் இம்பால்-சில்சாா் இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவை இல்லாததால், இம்பாலில் இருந்து அஸ்ஸாமையொட்டிய ஜிரிபாம் மாவட்டத்துக்கு செல்ல கொல்கத்தா அல்லது குவாஹாட்டி என அதிக தொலைவும், செலவும் மிக்க வழிகளை மக்கள் பயன்படுத்த வேண்டியிருந்தது.

இதனால் அவா்கள் சிரமத்தை எதிா்கொண்டனா். தற்போதைய விமானச் சேவையின் மூலம் இம்பால்-ஜிரிபாம் இடையிலான போக்குவரத்து எளிமையாகியுள்ளது. முதல் கட்டமாக வாரத்துக்கு இருமுறை விமானங்கள் இயக்கப்பட உள்ளன. விரைவில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும்’ என்றாா்.

நிலையான லாபமின்மை, மானியக் காலம் நிறைவு போன்ற காரணங்களால் இம்பால்-சில்சாா் விமான போக்குவரத்து கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.