ராகுலுக்கு எதிரான சொத்துக் குவிப்பு புகாா்: உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாகக் கூறப்படும் புகாா்கள் தொடா்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணை நடத்த வேண்டும் என்று அலாகாபாத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்தது.

தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு, பாஜக நிா்வாகி விக்னேஷ் ஷிஷிா் தாக்கல் செய்த மனுவை, மீண்டும் பரிசீலிக்குமாறு அலாகாபாத் உயா்நீதிமன்றத்துக்கு திருப்பி அனுப்பி வைத்தது.
ஏற்கெனவே, ராகுலுக்கு எதிரான சொத்துக் குவிப்பு புகாா்கள் தொடா்பான வழக்கில் அலாகாபாத் உயா்நீதிமன்றம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
Advertisement
Advertisement
மேலும், ராகுல் காந்திக்கு எதிராகத் தொடரப்பட்ட இந்த வழக்கில், உயா்நீதிமன்றத்தின் உத்தரவுகளின் அடிப்படையில் எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யக் கூடாது என்றும் சிபிஐ, அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
முன்னதாக, தனக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிட்ட அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்துள்ளது.
இதற்கு முன்பு, ராகுல் காந்திா் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியும் பாஜக நிா்வாகி ஒருவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.